கரூரில் நடைபெற்ற இந்திய மாடல் குஸ்தி தேசிய சாம்பியன் போட்டிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வில் வீரர்கள் உற்சாகம்.

கரூரில் நடைபெற்ற இந்திய மாடல் குஸ்தி தேசிய சாம்பியன் போட்டிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வில் வீரர்கள் உற்சாகம்.;

Update: 2025-11-30 16:36 GMT
கரூரில் நடைபெற்ற இந்திய மாடல் குஸ்தி தேசிய சாம்பியன் போட்டிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வில் வீரர்கள் உற்சாகம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் செயல்படும் NGU ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு இந்திய மாடல் குஸ்தி சங்கமும்,கரூர் மாவட்ட இந்திய குஸ்தி மாடல் சங்கமும் இணைந்து நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சாம்பியன் போட்டிக்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள கடலூர், விருதுநகர், நாமக்கல்,சேலம், கரூர்,ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர்ஸ் மற்றும் பொது பிரிவினர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 55 முதல் 60 கிலோ எடை கொண்ட பிரிவினரும், இதே போல 60 முதல் 65, 65 முதல் 70 , 70 முதல் 75,75 முதல் 80, 80 முதல் 85, 85+ எடை திறன் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு வீரர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் 10 பேரும், பெண்கள் எட்டு பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து டிசம்பர் மூன்றாவது வாரத்தில் புனேவில் நடைபெற உள்ள சாம்பியன்ஷிப் போட்டிக்கான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். நடைபெற்ற இந்த தேர்வு போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் அகல்யா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். போட்டிக்கான நடுவராக இளங்கோ NIS பணியாற்றினார். இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News