மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 361 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 19.11.2025 அன்று நடைபெற்ற 58-வது தேசிய நூலக வார விழாவில் இராசிபுரம் முழுநேர நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் சு.விஜயலட்சுமி என்பவர் 2024-2025-ஆண்டிற்கான நல்நூலகர் விருதான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், குமாரபாளையம் வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் என்பவர் சிறந்த வாசகர் வட்டத்திற்கான நூலக ஆர்வலர் விருதும் பெற்றதைத் தொடர்ந்து, இன்றைய தினம் மேற்படி விருது பெற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விருதினை காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளப்பநாயக்கன்பட்டி சமூகநீதி அரசு பள்ளி மாணவர் விடுதியில் காவலர் மற்றும் ஏவலராக பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த நபரின் மனைவிக்கு சமூகநீதி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் (பி.ந.) கருணை அடிப்படையில் சமையலர் பணியிடத்திற்கான நியமன ஆணையினை வழங்கினார் இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஏ.கே.சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.