காங்கேயத்தில் துணி தேய்க்கும் மற்றும் சலூன் கடையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சேதம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் துணி அயனிங் செய்யும் கடை மற்றும் சலூன் கடைகளில் தீ விபத்து. பல லட்ச ரூபாய் துணிகள் மற்றும் சலூன் கடையில் உள்ள பொருட்கள் எரிந்து சேதம் மாகியது. காங்கேயம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.;
காங்கேயம் திருப்பூர் சாலையில் சின்னக்குட்டி(67) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே செந்தில்(58) என்பவர் துணிகள் அயனிங் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடைகளின் அருகே குப்பைக்கு தீ வைத்ததாக கூறப்படுகின்றது. அதில் இருந்து தீ பறந்துவந்து துணிகள் அயனிங் செய்யும் கடையில் விழுந்துள்ளது. பின்னர் மளமள என தீ பரவத்தொடங்கியது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 7க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அயனிங் செய்யும் கடையில் இருந்த 600க்கும் மேற்பட்ட சட்டை,பேண்ட்,சிலைகள் மற்றும் சலூன் கடை டேபிள்,சேர், மின்விசிறிகள் என அனைத்து தீயில் எறிந்து சேதமாகியது. தீயில் எறிந்த பொருட்களின் மதிப்பு சுமார் இதனுடைய மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.