வேன் கண்மாயில் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு. ஏழு பேர் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றி சென்ற வேன் கண்மாயில் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு. ஏழு பேர் படுகாயம்;

Update: 2025-12-02 14:54 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றிச்சென்ற வேன் கண்மாயில் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு. ஏழு பேர் படுகாயம் வன்னியம்பட்டி போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புது சென்னாகுளம் மாரியம்மாள் வீரலட்சுமி சண்முகத்தாய் வீரகாளி வேலம்மாள் தனமாரி வெங்கடேஸ்வரி ஆகியோர் புது சென்னாகுளம் பகுதியில் இருந்து நரிக்குடி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற போது ராமலிங்கபுரம் டு கோடாங்கி பட்டி சாலையில் ஆட்கள் ஏற்றி வந்த வேன் கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . மேலும் சம்பவ இடத்திலேயே மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் உயிரிழந்தார் .மேலும் படுகாயம் அடைந்த ஏழு பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் 6 பெண்கள் உட்பட ஏழு பேர் காயம். காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News