திருச்செங்கோட்டில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் கூட்டம் இன்று கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்
திருச்செங்கோட்டில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் எஸ் ஐ ஆர் விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு இன்னும் ஒரு வார காலம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்துஆலோசிக்கப்பட்டது;
தமிழ்நாடு முழுவதும் எஸ் ஐ ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணி நாளை நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மேலும் ஒரு வார காலம் கால நீட்டிப்பு செய்துள்ளது இது குறித்து அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்களுக்கு கூட்டம் நடத்தி தேர்தல் ஆணையம் சார்பாக எடுத்துக் கூறி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையில் திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் திருச்செங்கோடு கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் வாக்குச்சாவடி அதிகாரிகளை வருவாய் கோட்டாட்சியர் லெனின் பாராட்டினார் 95 விழுக்காடு எஸ் ஐ ஆர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் இதற்கு உதவிய வாக்குச்சாவடி அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் மேலும் தற்போது தேர்தல் ஆணையம் ஒரு வார காலம் கால நீட்டிப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார் மேலும் எஸ் ஐ ஆர் படிவங்கள் நிரப்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்டறிந்தார் அரசியல் கட்சி முகவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை எடுத்துக் கூறினார் ஓட்டு பட்டியலில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் இணைப்பதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் தற்போது செய்துள்ளதாக தெரிவித்தார் இந்த கூட்டத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்