நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின நிகழ்ச்சி
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ, மாணவியர் நெகிழி பொருட்களை தவிர்க்க துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய நாமக்கல் மாவட்ட செயற்பொறியாளர் வழிகாட்டுதலின்படி, அலுவலக உதவி மேலாளர் வித்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களுக்கு மாசுபடுதலால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய் நொடியின்றி வாழலாம் என அறிவுறுத்தப்பட்டது. தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் நெகிழி பொருட்களை தவிர்க்க துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றும் மாசுபடுவதை தடுப்போம் என்றும், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை தவிர்ப்போம் என்றும், கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவோம் என்றும், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை எனது அன்றாட வாழ்வில் பின்பற்றுவோம் என்றும் தூய்மையான ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு வழங்க பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.