குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அதிவேகத்தில் காங்கேயத்தை கடந்த ஆம்புலன்ஸ்
3 1/2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற அதிவேகத்தில் காங்கேயத்தை கடந்த ஆம்புலன்ஸ்;
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை இன்று காலை ஒரு ஆம்புலன்ஸ் அதிகாலை அதிவேகத்தில் கடந்து சென்றது . இந்த ஆம்புலன்ஸ்க்கு காங்கேயம் பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காவல்துறையினர் வழிவிடும் வகையில் உதவி செய்தனர். இது குறித்து விசாரித்த போது கொடுமுடி பிரீத்தி மருத்துவமனையில் 3 1/2 வயது குழந்தை இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதனால் அவசரஅவசரமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் உதவியுடன் கொடுமுடி முதல் கோவை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு சென்றது. இதற்க்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும்,காவல்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் கொடுமுடியை சேர்ந்த தொண்டன் ஆம்புலன்ஸ்சில் அஜித்குமார்(26) என்ற ஓட்டுநர் உதவியுடன் அந்த 3 1/2 வயது குழந்தை அழைத்து செல்லப்பட்டது. மேலும் உதவிக்கு முன்னும் பின்னும் காங்கேயம் ரவி ஆம்புலன்ஸ் பாதுகாப்பிற்கு சென்றது. கொடுமுடி ,முத்தூர்,காங்கேயம், அவிநாசி பாளையம், பல்லடம்,சூலூர் வழியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.