தமிழக போக்குவரத்து துறையின் பொற்காலம் அதிமுக ஆட்சி காலம் - முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெருமிதம்.

தமிழக போக்குவரத்து துறையின் பொற்காலம் அதிமுக ஆட்சி காலம் - முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெருமிதம்.;

Update: 2025-12-03 13:20 GMT
தமிழக போக்குவரத்து துறையின் பொற்காலம் அதிமுக ஆட்சி காலம் - முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெருமிதம். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதியில் உள்ள கோடங்கிபட்டியில் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது, அங்கு கூட இருந்தவர்களிடையே பேசும்போது போக்குவரத்து துறைக்கு பொற்காலம் என்றால் அது அதிமுக ஆட்சி தான். 2-ஆண்டுகளுக்கு முன்பே 6 ஆயிரம் பேருந்துகள் இயங்கவில்லை எனது திமுக கூட்டணி கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிஐடியூ சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார். தற்பொழுது மேலும் 2000 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது என்று கூறிய அவர், தற்போது போக்குவரத்து துறையில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கு வாட்ஸ் அப்பில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அழைப்பு விடுப்பு வருவது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் தமிழும் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்நுகள் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதற்கு திமுக அரசு தான் காரணம். ஆனால்,இதை திமுக கூட்டணி கட்சிகள் தட்டிக் கேட்பது இல்லை என்றார். மேலும்,போக்குவரத்து துறையின் பொற்காலம் என்றால் அது அதிமுக ஆட்சி காலம் தான் என உணர்ச்சிபூர்வமாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கருணாநிதி குடும்பம் தான் இந்தியாவிலேயே ஊழலுக்கு பேர் போன குடும்பம். ஆனால் அவர்களுக்கே கத்துக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் தான் போக்குவரத்து துறை,டாஸ்மாக், மின்சார வாரியம் என மூன்று துறைகளில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என குற்றம் சாட்டினார்.

Similar News