கரூர்-நீதிபதிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு மனு அளிக்க வந்த தவெக நிர்வாகிகள் ஏமாற்றம்.

கரூர்-நீதிபதிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு மனு அளிக்க வந்த தவெக நிர்வாகிகள் ஏமாற்றம்.;

Update: 2025-12-03 14:25 GMT
கரூர்-நீதிபதிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு மனு அளிக்க வந்த தவெக நிர்வாகிகள் ஏமாற்றம். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இரண்டாவது நாளான இன்று பல்வேறு தரப்பினரிடம் மனுக்களை பெற்றனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போ அப்போது அங்கு தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளிக்க வந்தனர். அவர்களிடம் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து வணிகர் சங்கங்களை சேர்ந்த மூன்று பேர் மனு அளிக்க வந்த போது, அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கூறியதால், மனு கொடுக்க வந்த அவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்க முடியாமல் திரும்பி சென்றனர். இதேபோல் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அரசு மருத்துவர்கள் நான்கு பேரும் விசாரணை முடிந்து திரும்பி சென்றனர்.

Similar News