தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பேசிய தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும் தீவிரவாதம் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவதூறு பிரசாரம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-12-04 06:48 GMT
தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பேசிய தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும் தீவிரவாதம் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவதூறு பிரசாரம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன் வரவேற்புரையாற்றினார் மாவட்ட தலைவர் தங்கராசு துவக்கவுரையாற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் டி.சி.பாஸ்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் (எ) ஹரி பாஸ்கர், மாவட்ட தொண்டரணிஅமைப்பாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, விசிக மாவட்ட செயலாளர் (மே) ரத்தினவேல், மாநில விவசாயிகள் அணி செயலாளர் வீர.செங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரமேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், இந்திய தொழிலாளர்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், மக்கள் அதிகாரம் காவிரி நாடன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குரல் வள்ளுவன், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ஆதி, எம்.எஸ்.காதர் மனிசுடர். மற்றும் அனைத்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Similar News