ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி...
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குறுக்கபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், 09 வயதுக்குட்பட்ட பிரிவில் டி.நிதிக் ஆரியஹான் முதலிடத்தையும், எஸ்.ஆர். சிவபாலன் இரண்டாம் இடத்தையும், V.S ஜெய்வின் சூர்யா மூன்றாம் இடத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் ஏ.கே.சௌமித்ரா முதலிடத்தையும், ஏ.ஜே.ஆதர்சனா இரண்டாம் இடத்தையும், S.கவிஸ்ரீ மூன்றாம் இடத்தையும் இடத்தையும் மணவர்கள் பிரிவில் டி.சஞ்சித் முதலிடமும், பி.எஸ்.சர்வேஷ் இரண்டாம் இடத்தையும், கார்த்திக் விக்னேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் டி.ஸ்ரீ யாழினி முதலிடமும், பி.ஆத்ரிகா இரண்டாம் இடத்தையும், பி.பிரதீக்ஷா மூன்றாம் இடத்தையும், 16 வயது பிரிவில் ஏ.ஷான்வின் முதலிடமும், வி.சாய்கிரண்ராஜன் இரண்டாம் இடமும், டி.ஹரிஷ் மூன்றாம் இடமும் பெற்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளியின் தாளாளர் N.V. நாகேந்திரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் N.V.சங்கீதா, ப்ரைம் செஸ் அகாடமி தலைவர் N.மோகன் ராஜ், செயலாளர் தேவேந்திரன் மற்றும் பெற்றேறோர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..