துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் ஆதரவற்ற இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞரணி..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் ஆதரவற்ற இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞரணி...;

Update: 2025-12-08 14:14 GMT
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் ஆதரவற்ற இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞரணி... மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன் மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 8.12.2025 திங்கட்கிழமை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர். என். இராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன் அவர்களின் ஆலோசனைப்படி, இராசிபுரம் நகரக் கழக செயலாளர் என். ஆர். சங்கர் அவர்களின் வழிகாட்டுதலோடு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக் அவர்கள் ஏற்பாட்டில் வார்டு எண் 23 அரசு அங்கன்வாடி பள்ளியில் பாய் மின்விசிறி குழந்தைகளுக்கான எடை இயந்திரம் குழந்தைகள் பயன்படுத்தும் உபகரணம், மற்றும் இராசிபுரம் நகரம் காட்டூர் ரோடு அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் பயணிகள் ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடை ஆகியவற்றை இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், கழக இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி. விஸ்வநாத் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் ராஜேஷ் பாபு, இராசிபுரம் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியன், லவக்குமார், வார்டு பாக அமைப்பாளர் வினோத், வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் சதீஷ், சந்தோஷ், சரவணன், அருள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News