திமுக அரசை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என விஜய் நினைக்கிறார், அவருக்கு அது சாதகமாக இருக்காது என ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி...
திமுக அரசை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என விஜய் நினைக்கிறார், அவருக்கு அது சாதகமாக இருக்காது என ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழாவானது நடைபெற்றது.இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 119 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அரசை பார்த்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களில் திராவிட அரசை பார்த்து தான் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றிய திட்டங்கள் தான் பல்வேறு மாநிலங்களில் கொண்டு வருகிறார்கள், அதனை விஜய்யை கொஞ்சம் யோசிக்க சொல்லுங்கள். திமுக அரசை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைக்கிறார் அவருக்கு அது சாதகமாக இருக்காது. அவர் சும்மா பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார், அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை போல் ,இதுவரை கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா ஏன் அதிமுக ஆட்சியை விமர்சிப்பதில்லை. மக்கள் யாரை நம்புகிறார்கள்? யாருக்கு வாக்களிக்கிறார்கள்? யாரை அரியணையில் ஏற்றுகிறார் பார்ப்போம், 2026 தேர்தலில் திமுக ஆட்சி அமையும் என கூறினார். இந்த நிகழ்வில் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர் கவிதா சங்கர், மற்றும் அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.