அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?. ராசிபுரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு...

அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?. ராசிபுரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு...;

Update: 2025-12-09 15:37 GMT
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து அமைத்தனர் தீபம் ஏற்ற முயன்ற போது காவல்துறை நிறுத்தியத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் , தொடர்ந்து தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,கடைவீதி, கோனேரிப்பட்டி,பட்டணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?எனும் தலைப்புடன் நகர் பகுதி முழுவதும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.மேலும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் காக்க காக்க தமிழ்நாட்டை காக்க விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட, போராடுவோம்.. வெல்வோம்... என நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகர் பகுதியில் எந்த அமைப்பினர் அல்லது எந்த கட்சியினர் போஸ்டர் ஒட்டினர் என்பது குறித்து தொடர்ந்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News