ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளை இணைய வழியாக வழக்குகளை தாக்கல் செய்ய சொல்வதை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்;

Update: 2025-12-09 16:06 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளை இணைய வழியாக இ- பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய சொல்வதை முழுமையாக ரத்து செய்ய கோரியும், வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வழக்கறிஞர் தங்களது தொழிலை சுதந்திரமாக செய்யும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக சட்டம் இயற்ற வலியுறுத்தியும், வழக்கறிஞர்களின் சேமநலநிதியில் தற்போது உள்ள ரூபாய் 10 லட்சத்திலிருந்து, 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் கூறி, இன்று(09.12.2025) காலை 10 மணிக்கு உண்ணாநிலை அறப் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற வாசலில் வைத்து நடைபெற்றது.

Similar News