மணப்பாறையில் குடியிருப்பு பகுதியில் விஷப்பாம்பு நீண்ட நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர் .

மணப்பாறையில் குடியிருப்பு பகுதியில் விஷப்பாம்பு நீண்ட நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர் .;

Update: 2025-12-09 21:28 GMT
பாம்பை பிடிக்கும் படம் காட்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணா நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தெரு பகுதிகளில் அதிக அளவில் செடி கொடிகள் புதர் போல் மண்டி இருக்கின்றன. மேலும் இப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர். குப்பைகளை அகற்றாமல் இருப்பதாலும் இப்பகுதியில் விஷ பூச்சிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று அப்பகுதியில் இறை தேடி வந்துள்ளது இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு லாபகமாக பாம்பு பிடிப்பான் உதவியுடன் பாம்பை பிடித்து அருகில் உள்ள அடர்ந்த வணபகுதியில் கொண்டு சென்று விட்டனர். மேலும் இப்பகுதி பொது மக்கள் இப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் மண்டி உள்ள செடி, கொடிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மணப்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News