குளித்தலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு

கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய சம்பவம்;

Update: 2025-12-10 07:34 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் முதல் பேருந்து நிலையம் வழியாக பெரிய பாலம் வரை 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமப்பு செய்துள்ள பேக்கரி, டீக்கடை, ஜவுளி கடை, மளிகை கடை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு வணிக கடைஉரிமையாளர்களுக்கு கடந்த 10 நாட்கள் முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றி கொள்ள வேண்டும் என நேரடியாக அனைத்து கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர். அதனை எடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் தலைமையில் குளித்தலை போலீசாருடன் முதற்கட்டமாக குளித்தலை சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய சாலையில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ள பேக்கரி, டீக்கடை, ஜவுளிக்கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளங்களை ஜேசிபி கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டதால் குளித்தலை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஜெயபால் கூறுகையில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும் மேலும் நிரந்தர ஆக்கிரமிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் குளித்தலை பகுதி வியாபாரிகள் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News