குளித்தலையில் விசிக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் சிறப்ப வரவேற்பு அளித்தார்;
கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குளித்தலை கிராமியம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு தலைமை வகித்தார். புதிதாக பொறுப்பேற்ற பெரம்பலூர் மண்டல செயலாளர் ஸ்டாலின், கரூர் மண்டல செயலாளர் வேலுச்சாமி, திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன், மண்டல துணைச் செயலாளர்கள் கதிரவன், பெரியசாமி ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, கரூர் மாவட்ட மேலிட பொறுப்பாளர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் அவிநாசி, கிருஷ்ணராயபுரம் தொகுதி துணை செயலாளர் சரவணன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிவேந்தன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி, குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் குமார், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், நங்கவரம் பேரூர் து. செயலாளர் பழனிவேல், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் முருகேசன், தோகைமலை மேற்கு ஒன்றிய பொருளாளர் மகாதேவன், தோகைமலை ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை அமைப்பாளர் சரத்குமார், மலைவேல், தர்மராஜ், பாரதி, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்