ராசிபுரம் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஆம்னி ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியல்...

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஆம்னி ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியல்...;

Update: 2025-12-12 17:11 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை, 39; வேலகவுண்டம்பட்டி கொங்கு மெட்ரிக் தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காத கருக்கம்பாளையம் பகுதியில் இருந்து தனது ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்போது, ராசிபுரம் அடுத்த குருக்குபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஆம்னி வேன் செந்தாமரை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த செந்தாமரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராசிபுரம் போலீசார் ஆம்னி வேன் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் எனக் கோரி உறவினர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராசிபுரம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, மறியலை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News