அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா தேசிய மாணவர் படை சார்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு 15 ஆவது பட்டாலியன் கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கர்னல் கோபால் கிருஷ்ணா மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் லெப்டினன்ட் கர்னல் ராஜவேலு ஆகியோரின் ஆலோசனையின் படி கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தார் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் என்.சி.சி. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி,,கட்டுரை போட்டி, நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. . தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி விழா ஏற்பாடு செய்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தினேஷ்குமார், ஆசிரியர்கள் சுதா, கவிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .