ராமநாதபுரம் பசுமை தமிழ்நாடு உருவாக திருமண விழாவிற்கு வந்த அனைவருக்கும் மகக்கண்டு வழங்கிய மணமக்கள்
வாணி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பசுமை தமிழ்நாடு உருவாக அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மணமக்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு;
ராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் செய்யது ராசிக் அலி, மணமகள் ஆமினா சிரின் ஆகியோர்கள் திருமணம் வாணி பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மணமகன் இரண்டு குதிரைகளில் அழைத்து வரப்பட்டு வாணி பகுதி முழுவதும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர் தாரை தப்பட்டைகள் ஆட்டம் பாட்டத்துடன் வாணி பள்ளிவாசலுக்கு அழைத்து வரப்பட்ட மணமகன் அங்கு ஜமாத்தார்கள் முன்னிலையில் நிக்காஹ் என்னும் திருமணம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பள்ளிவாசலில் திருமணத்திற்கு வந்த பொது மக்களுக்கு பசுமையை நினைவு கூறும் வகையில் அனைவரும் மரக்கன்றுகள் நடவு செய்து மண்வளத்தை காக்கவும் பசுமையான தமிழகத்தை உருவாக்கவும் வாணி கிராமம் முழுவதும் அனைவரும் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என மணமகன் செய்யது ராசிக் அலி கோரிக்கை விடுத்து பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் புத்தகங்களையும் வழங்கி நன்றி தெரிவித்தார் குறிப்பாக வளரும் இளைய தலைமுறையினர் அனைவரும் வீடுகள் சாலைகள் தோறும் மரக்கன்றுகள் நடவு செய்து அமைதியான சூழல் உருவாகவும் குளிர்ச்சியை உருவாக்கவும் அனைவரும் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் வாணி கிராமத்தைச் சார்ந்த அசன் கனி, சீனி முகமது ஆகியோர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்