ராமநாதபுரம் நீரில் மூழ்கி இருவர் பலி
குயவன்குடி ஊரணியில் குளித்த தாய் மகன் பரிதாபமாக உயிரிழப்பு;
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சாய்பாபா படங்களை வைத்து வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று வந்த ஒரு குடும்பத்தினர் ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா ஆலயம் பகுதியில் குளிப்பதற்காக சென்றபோது பென் சலம்மாள் வயது 38 என்பவர் தனது மூத்த மகன் ஊரணியில் மூழ்குவதை அறிந்து அவரை காப்பாற்ற வேகமாக தண்ணீரில் இறங்கியுள்ளார் அவரை தொடர்ந்து அவரது இளைய மகன் நவீன் வயது 12 என்பவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர் இருவரும் ஊரணி சகதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருபது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார் அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்குறை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் 20 உடலையும் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது ஆந்திராவிலிருந்து யாசகம் பெற்று உயிர் வாழ்ந்து வந்த குடும்பத்தினர் தமிழகத்தில் தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது