டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்!!

டாஸ்மார்க் பணியாளர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு என்பதை உருவாக்கி அதன் தலைமையில் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-15 10:59 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மார்க் பணியாளர்கள் கூடுதல் பணி சுமை மற்றும் தொற்று நோய்களை உருவாக்கும் காலி எச்சில் மதுபாட்டில் சேகரிக்கும் பணியை பணியாளர்கள் மீது திணிப்பதை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று முதல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் காளி மது பாட்டில்களை திரும்ப பெறுவது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மார்க் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட பிறகு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலுவலக வாசல் வந்தனர் அவர்களை உள்ளே விடாமல் நிர்வாகம் தடுத்தது. இதனால் அலுவலக வாசலில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்நிலையில் டாஸ்மார்க் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களை டாஸ்மார்க் மேலாளர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டாஸ்மார்க் பணியாளர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு என்பதை உருவாக்கி அதன் தலைமையில் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கடைகளின் சாவியை கையில் ஏந்தி போராடிய டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் இயங்காது என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படும் என தெரிகிறது. சங்க நிர்வாகிகள் முத்துமாணிக்கம் தமிழ்வேந்தன் ஆறுமுகம் முருகேசன் செல்லத்துரை குமார் சௌந்தர்ராஜன் ஜீவானந்தம் சரவணன் குமார் சௌமியமூர்த்தி பாண்டியன் விஜயபாஸ்கர் சிவன் மூர்த்தி சித்திரைவேடு கணேசன் மூர்த்தி பிரேம்குமார் ராஜேந்திரன் சிவகுமார் திருநாவுக்கரசு என டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

Similar News