ஐயப்பன் ஊர்வலம், திருவிளக்கு பூஜை, அன்னதான விழா
குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, அன்னதான விழா நடந்தது.;
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், குளத்துக்காடு கிளை, ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவின் சார்பில் 24ம் ஆண்டு விழா, திருவிளக்கு பூஜை, அன்னதான விழா, வேணு குருசாமி தலைமையில் நடந்தது. 54ம் ஆண்டு யாத்திரை செல்லும் வேணு குருசாமியை, ஜெயபால் தேசிக தம்புரான் சுவாமிகள், அகில பாரத ஐயப்பா சேவா சங்க, மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் உள்ளிட்ட பல குரு சுவாமிகள் வாழ்த்தினர். காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது., இதில் ஐயப்ப சுவாமி, விநாயகர், முருகன் , சிவலிங்கம், பார்வதி தேவி ஆகிய சுவாமிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தவாறு வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஆபரண பெட்டி, கற்பூர ஆழி ஆகியன இடம்பெற்றன. காவிரி ஆற்றிலிருந்து, சேலம் சாலை இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளின் வழியாக வந்து, குளத்துக்காடு கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் நிறைவு பெற்றது. திருவிளக்கு பூஜை, பக்தி பாடல்கள் பஜனை, மற்றும் சிறப்பு அபிஷேக,அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.