குமாரபாளையம் போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

குமாரபாளையம் திருட்டு வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்தமைக்காக இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசாரை, நாமக்கல் எஸ்.பி. விமலா நேரில் பாராட்டினார்;

Update: 2025-12-15 14:05 GMT
குமாரபாளையம் திருட்டு வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்தமைக்காக இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசாரை, நாமக்கல் எஸ்.பி. விமலா நேரில் பாராட்டினார் குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் வசிப்பவர் நாகராஜ், 41. லேத் பட்டறை தொழில். இவர் குடும்பத்துடன் சேலம் சென்று விட்டு நவ.28, 08:00ல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, 25 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டுகுற்றவாளியை கண்டுபிடித்தமைக்காகவும், திருட்டு போன பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்தமைக்காகவும், நாமக்கல் எஸ்.பி. விமலா, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்,.ஐ, இளமுருகன் உள்ளிட்ட போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

Similar News