தரைப்பாலம் வடிகால் அமைக்க பூமி பூஜை
கிராமப் பகுதியில் வடிகால் மற்றும் தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை;
நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் சௌதாபுரம் ஊராட்சி பொது நிதியிலிருந்து கொல்லப்பட்டி நகர் அருந்ததியர் தெரு பொது கிணறு முதல் ஓடை வரை சிறு பாலம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நாமக்கல் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு.கே.எஸ்.மூர்த்தி ஆலோசனைப்படி வட்டார வளர்ச்சி அலுவலர் R.சுரேஷ் அவர்களின் தலைமையிலும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து அவர்களின் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு நடைபெற உள்ள பணிகளை துவங்கி வைத்தனர்...... மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் திரு சௌந்தரம் அவர்கள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் திரு.S.ஜெயந்தி சம்பத், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணியம்மாள் அவர்கள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.....