தோகைமலையில் கெட்டுப்போன மிட்டாய் விற்பனை
கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரி;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியம் நாட்டார் கோவில் பட்டியை சேர்ந்தவர் முத்து. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று தோகைமலைக்கு சொந்த வேலையாக வந்துள்ளார். தோகைமலையில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் தனது குழந்தைகளுக்கு குடை மிட்டாய் வாங்கி தந்துள்ளார். அந்த மிட்டாய்களில் சிறு வண்டுகள் மற்றும் புழுக்கள் இருந்துள்ளது. இதனைக் கண்டு முத்துவின் மனைவி குழந்தைகளிடமிருந்து மிட்டாய்களை வாங்கி கணவரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குளித்தலை உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் செய்துள்ளார். கரூர் கலெக்டர் தங்கவேல் உத்தரவின் படி ஆய்வு பணியில் இருந்த உணவு பாதுகாப்பு அலுவலர் லியோ தோகைமலையில் கெட்டுப்போன மிட்டாய்களை விற்பனை செய்த கடையை ஆய்வு செய்தனர். இதில் கடைக்காரருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டர் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு பணி செய்து வருகின்றனர்.