ராமநாதபுரம் சாலை விபத்தில் பெண் பலி

ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற பெண் சாலையின் ஓரம் கிடந்த மண் சறுக்கி கீழே விழுந்ததில் பின்னால் சென்ற அரசு பேருந்தின் டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழப்பு;

Update: 2025-12-16 10:57 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஸ்கூட்டி வாகனத்தை ஓட்டிச்சென்ற பெண் சாலை ஓரம் கிடந்த மண் சறுக்கி கீழே விழுந்ததில் பின்னால் வந்த அரசு பேருந்து பெண்ணின் தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ராமநாதபுரம் களத்தாவூர் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் சுய உதவி குழுவில் பணம் செலுத்தி விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டி வாகனத்தில் பாரதி நகர் அடுத்த மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் குமரய்யா கோயில் பேருத்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரம் கிடந்த மண் சறுக்கியதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி வளர்மதி சாலையில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் டயர் கீழே விழுந்து கிடந்த வளர்மதியின் தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி வளர்மதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதுடன் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு பேருந்தை எடுத்து வந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் தலை நசுக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறி அழுதத்து அங்கு இருந்தவர்களை கண்களை கண்கலங்க செய்தது.

Similar News