போதை தரும் திரவம் கலந்து அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது
குமாரபாளையம் அருகே போதை தரும் திரவம் கலந்து அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் அருகே வட்டமலை பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருபவர் இளங்கோ, 46. இவர் அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் வாங்கி, அதில் அதிக போதை தரும் திரவம் கலந்து, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜ் உள்ளிட்ட போலீசார், நேரில் சென்று, கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். திரவம் கலந்த 40 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.