ஆட்டோ ஓட்டுனருக்கு பாட்டில் உடைத்து குத்து

குமாரபாளையத்தில் ஆயிரம் ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனரிடையே ஏற்பட்ட தகராறில் பாட்டில் உடைத்து குத்தியதால் ஆட்டோ ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.;

Update: 2025-12-16 13:18 GMT
குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் ஆட்டோ ஓட்டுனர் சங்க கூட்டம் நடந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனர் சங்க துணை செயலர் ராம்குமார், 40, என்பவரிடம், மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் பிரசாந்த், 32, என்பவர், ராம்குமாரிடம், பணம் ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். பிரசாந்த்க்கு ராம்குமார் பணம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இரவு 10:00 ,மணிக்கு மேல், ராம்குமார், பிரசாந்த் வசம், பணம் ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு, ஆட்டோவில் பணம் உள்ளது. என்னுடன் வந்தால் நான் எடுத்து தருகிறேன் என்று கூறி, தனது டூவீலரில், காமராஜ் நகர், சின்னதாய் கோவில் அருகே அழைத்து சென்றார். இங்கு எதற்கு அழைத்து வந்தாய்? என ராம்குமார் கேட்க, டூவீலரில் வைத்திருந்த பீர் பாட்டில் எடுத்து, பீர் குடித்து விட்டு, அந்த பாட்டிலை உடைத்து, என்னிடமா பணம் கேட்கிறாய்? என்று, உடைந்த பாட்டிலால், ராம்குமார் இடது கழுத்தில் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த ராம்குமார், சத்தம் போடவே, உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி, பிரசாந்த் ஓடி விட்டார். ராம்குமார் ஈரோடு அரசு மருத்ததுவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News