கள்ளை அருகே மண் பாதை அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியல்
போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி;
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சியில் உள்ள எல்லைக்கோவில்பட்டி கிராமம் கள்ளை, புத்தூர், தளிஞ்சி ஆகிய 3 ஊராட்சிகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 35 குடும்பங்கள் உள்ளது. மேலும் எல்லைக்கோவில்பட்டி கிராமத்திற்கு கள்ளை தென் பகுதியில் இருந்து தார்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் எல்லைக்கோவில்பட்டியில் இருந்து ஆணைக்கவுண்டம்பட்டி வழியாக மண் பாதையும் பட்டா நிலத்தில் அமைந்து உள்ளது. இதில் எல்லைக்கோவில்பட்டியில் உள்ள பொதுமக்கள் கரூர் உள்பட மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு கள்ளை வழியாக சென்று வருகின்றனர். இதேபோல் தளிஞ்சி, புத்தூர், காவல்காரன்பட்டி உள்பட திருச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்ட பகுதிகளுக்கு ஆணைக்கவுண்டம்பட்டி வழியாக செல்லும் மண் பாதையினை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இதில் எல்லைக்கோவில்பட்டி பகுதி பொதுமக்கள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ வசதிகள் உள்பட பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக ஆணைக்கவுண்டம்பட்டி வழியாக செல்லும் மண் பாதையிணை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மண் பாதையானது பட்டா இடத்தில் உள்ளது என்றும், அதனால் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்று சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளார். இருந்த போதும் பொதுமக்கள் அந்த மண் பாதை வழியாக சென்று வந்து உள்ளனர். இந்நிலையில் ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் மண் பாதையினை பட்டா இடத்தில் உள்ளது என்று கூறி முற்களை கொண்டு அடைத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எல்லைக்கோவில்பட்டி பகுதி பொதுமக்கள் தாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பாதையினை மீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த குளித்தலை மண்டல துணை வட்டாட்சியர் நீதிராஜன், நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, முன்னால் துணை சேர்மன் சின்னவழியான், கள்ளை ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் கருப்பையா, தமிழர் தேசம் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் ஆகியோர் போராட்டம் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை செய்தனர். அப்போது 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையினை தனிநபர் முற்களை கொண்டு அடைத்து உள்ளார். இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலையில் பொதுமக்கள் உள்ளதோடு, கடந்த 3 நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லமுடியாமல் மாணவ மாணவிகளும், வேலைகளுக்கு செல்லமுடியாமல் பொதுமக்களும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். ஆகவே நில அளவை செய்து பாதையினை ஏற்படுத்தி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து நில அளவையர்களை கொண்டு அளவீடு செய்தனர். அப்போது நச்சலூர்-புத்தூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை பட்டா நலமாக உள்ளது என்றும், அதற்கு மேல் திசையில் இருந்து எல்லைக்கோவில்பட்டி வரை ஊராட்சிகளின் எல்லையை ஒட்டி சுமார் 12 அடி அகளத்தில் பட்டா நிலத்தில் பொதுப்பாதை உள்ளது என்றும் கண்ணகீடு செய்து அத்துக்ல் நடப்பட்டது. மேலும் நச்சலூர்-புத்தூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை அருகில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தை பொதுமக்கள் பாதைக்காக தமிழ்நாடு அரசுக்கு எழுதி கொடுப்பதாக முன்வந்தனர். இதனை அடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் எல்லைக்கோவில்பட்டி கிராமத்திற்கு பாதை அமைக்கும் பணிகளை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மேற்கொண்டனர். இதனால் எல்லைக்கோவில்பட்டி பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.