கும்மிடிப்பூண்டி : ஆரணியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்.
கும்மிடிப்பூண்டி : பெரியபாளையம் ஆரணியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.பேரூராட்சிமன்ற தலைவராக ராஜேஸ்வரி, துணைத்தலைவராக சுகுமார், நியமனக்குழு உறுப்பினராக கண்ணதாசன் ஆகியோர் பதவிவகித்துவருகின்றனர். நூற்றாண்டை கடந்த இந்த பேரூராட்சியின் செயல் அலுவலராக அபுபக்கர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பேரூராட்சியில் உள்ள தஸ்தகிரி சாயபு தெருவின் மேற்குப்பகுதியில் கழிவுநீர் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கழிவு நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கிநிற்கிறது. இதனால் மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்லமுடியாமல் சாலையில் பல நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இவ்வழியே ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடை வீதிக்கும் இத்தெருவின் அருகே உள்ள பரிசோதனை மையத்துக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும்,பேரூராட்சி நிர்வாகமும்,சுகாதாரத்துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்துதேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும். வருங்காலங்களில்சாலையில் கழிவுநீர் மற்றும் மழை நீர்தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)