குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
நாட்டுப்புற நடன போட்டியில் மாநில அளவில் தேர்ச்சி;
கரூர் மாவட்டம் குளித்தலை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டுப்புற நடன போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேரில் மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்