குளித்தலை தொகுதியில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கல்
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்;
கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட செங்குளம், வேங்காம்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 299 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு வழங்கினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் கதிரவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்