அரசு கல்லூரியல் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெட்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் உலகம் உங்கள் கையில் என்ற தலைப்பில் மாநில அளவிலான நிகழ்ச்சி 05.01.2026 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் இளைஞர் மேம்பாடு, மாநிலத்தின் மேம்பட்ட அறிவியல் மனப்பான்மை உள்ளடக்கிய தன்மை மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முதன்மைத் திட்டங்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் கலச்சார நிகழ்ச்சிகள், அரங்குகள் மற்றும் கருப்பொருள் காட்சிப்படுத்துதல் மூலம் அந்தந்த அரசுத்துறைகளால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் எடுத்துக்காட்டப்பட உள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உலகம் உங்கள் கையில் என்ற நிகழ்ச்சி 05.01.2026 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாமக்கல் அரசு சட்டக்க கல்லூரி கூட்டரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.இவ்விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக மடிக்கணினி வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியர் சு.சுந்தரராஜன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.