தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கான விளையாட்டுபோட்டிகள்

திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தலைமையில் பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.;

Update: 2026-01-03 13:52 GMT
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கான விளையாட்டுபோட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இன்று (3ம்தேதி) துவங்கியது. திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தலைமையில் பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கயிறு ஏறுதல், தந்திர கதம்ப போட்டி, ஏணிப்பயிற்சி உள்ளிட்ட போட்டிகளும், தடகள போட்டிகள் மற்றும் இறகுப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, நீச்சல் போட்டிகள் நடக்கிறது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தீயணைப் புத்துறை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து (4ம்தேதி)யும் நடைபெறுகிறது.

Similar News