திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலக நுழைவாயிலில் வட்டாட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா

Dindigul;

Update: 2026-01-05 11:56 GMT
திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் சேர்ந்த இன்று மக்கள் கட்சி தொண்டரணி தலைவராக செயல்பட்டு வரும் மோகன் திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் வரும் 7-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் நிலையில் குமரன் திருநகரில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசித்து வரும் நிலையில் பட்டா வழங்கியதோடு தற்பொழுது ஈ பட்டா வழங்கப்படும் எனக்கூறி அவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று சென்ற வருவாய்துறையினர் பட்டாவை ரத்து செய்துள்ளதாகவும், 50 ஆண்டு காலங்களுக்கு மேல் வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் வரி, சொத்து வரி கட்டி வரும் சூழ்நிலையில் பட்டாவை ரத்து செய்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியரிடம் முறையிட்டதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதாக கூறி பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் மோகன் ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு அந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கைவிட செய்தனர்

Similar News