அரசு பள்ளி மாணாக்கர்களின் வில்லுப்பாட்டு
குமாரபாளையம் அரசு உதவி பெறும் மாணாக்கர்கள் சார்பில் புத்தக கண்காட்சியில் வில்லுப்பாட்டு நடந்தது.;
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக 5 ம் ஆண்டாக புத்தகத் திருவிழா பத்து நாட்களாக நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தினந்தோறும் போட்டிகள் வைத்து சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணாக்கர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி வில்லுப்பாட்டு, சிறுகதை எழுதுதல், சிறுகதை வாசித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவர்களுக்கு நிறைவு நாளான நேற்று சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் தொழிலதிபர் ராஜாராம், அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை காந்தரூபி, சி.எஸ்.ஐ. பள்ளி தலைமையாசிரியை சுகந்தி, சமூக சேவகர்கள் காமராஜ், சித்ரா, சரவணன், ராஜவடிவேல், தீனா, சசி, சித்ரா, ராணி, உள்பட பலர் பங்கேற்றனர். புத்தக திருவிழாவிற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பிரகாஷ் நன்றி கூறினார்.