விசிக கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்பு;

Update: 2026-01-11 13:30 GMT
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஜெகதாபி சமுதாய கூடத்தில் மாவட்ட செயலாளர் அவிநாசி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி முன்னிலை வகித்தனர். தாந்தோணி ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றினார். இதில் மண்டல செயலாளர் வேலுசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல், இளங்கோ, ரிபாய்தீன் மாநில நிர்வாகி அகரமுத்து, ராமச்சந்திரன், செந்தில்குமார், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி, பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் முருகேசன், உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், புலியூர் பேரூர் செயலாளர் சக்திவேல், மகளிர் அணி அன்னபூரணம் கெஜா, மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், பிரபாகரன், பொன்னுச்சாமி, பூவம்பாடி விக்னேஷ், கோவக்குளம் பெருமாள், காளிதாஸ், வினோத், புலி ஈழம் உதயா மற்றும் பலர் கொண்டனர்.

Similar News