வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் வாளவந்தி சரவணன் கரூரில் பேட்டி

வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் வாளவந்தி சரவணன் கரூரில் பேட்டி;

Update: 2026-01-11 13:39 GMT
வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழக நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் வாளவந்தி சரவணன் கரூரில் பேட்டி. தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூர் அடுத்த ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் கட்சியின் மாநில தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர மாவட்ட பொறுப்பாளர் சாம்ராட் ரவிக்குமார், மாநில பொருளாளர் சசிகுமார், அமைப்பு செயலாளர் உதயசூரியன், மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார், மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றியகட்சியின் நிறுவனத் தலைவர் வாளவந்தி சரவணன் நிகழ்ச்ச நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் முதல் அரசியல் எழுச்சி மாநில மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் மக்கள் தொகை அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய மத்திய மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென முடிவு செய்துள்ளோம். இதில் எஸ்சி எஸ் டி கே இரண்டு தொகுதிகளிலும் பொது தொகுதிகளில் தலா ஆண்கள்,பெண்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு ஒன்று என முடிவு செய்துள்ளோம். இந்த கோரிக்கையை ஏற்கும் கட்சியோடு தமிழக நீதி கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார்.

Similar News