கடவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் சேர்மன் செல்வராஜ் தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம், கடவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக தைத் திருநாள் தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையை ஒட்டி திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. தலைமை கழகத்தின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆலோசனைப்படி தரகம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னால் சேர்மன் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மகளிரணி வேதவள்ளி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இதில் கடவூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி, செம்பியநத்தம், மேலப்பகுதி, தேவர்மலை, காளையபட்டி, வரவனை, கீழப்பகுதி, வாழ்வார்மங்களம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வென்ற அணிக்கு கோப்பைளுடன் ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசு பெற்ற அணிக்கு கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், 3ஆம் பரிசு பெற்ற அணிக்கு கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. மேலும் சைக்கிள் போட்டிக்கு கோப்பைகளுடன் முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2ஆம் பரிசு 2 ஆயிரம், 3ஆம் பரிசு ஆயிரம், ஓட்டப்பந்தையம் கோப்பைகளுடன் முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2ஆம் பரிசு 2 ஆயிரம், 3ஆம் பரிசு ஆயிரம் வழங்கப்பட்டது. கோப்பைகளுடன் முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2ஆம் பரிசு 2 ஆயிரம், 3ஆம் பரிசு ஆயிரம் வழங்கப்பட்டது. ஒன்றிய அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் குழுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்கள் மட்டும் கரூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், முன்னால் மாவட்ட கவுன்சிலர் கஸ்தூரி தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி பொன்னுச்சாமி, இளைஞரணி அமைப்பாளர் இளைவரசன், நிர்வாகிகள் பாண்டியன், மோகனா, கோமதி, மணிகண்டன், மனோஜ் பிரபாகரன், ஆனந்த், வேல்முருகன், அபு, அசோக்குமார், தங்கவேல், மகாலிங்கம், பாலு உள்பட திரலான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.