வணிகர்களின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு புதன்கிழமை காலை நாமக்கல் பழைய பேருந்து நிலைய வளாகத்திற்குள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் இளைஞர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.;

Update: 2026-01-14 14:37 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் பூபதி, 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருந்தினர்களை பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன், மாநகர அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் வரவேற்றனர்.அனைத்து மதம் சார்ந்த வணிகர்களும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியில் இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News