இளைஞர்கள் குடும்பத்தினருக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு
குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரு குடும்பத்தினர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கத்தாளபேட்டையை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான பிரேம் செல்வராஜ், அசோக் ஜெகதீசன் இருவரும் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி, ராமக்கூடல் பகுதியில் மத்தியரசின் ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் வாழை நார்களை பயன்படுத்தி யோகா செய்ய பயன்படுத்தும் விரிப்புகளை தயார் செய்து மத்தியரசின் வழிகாட்டுதல்களுடன் பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இவர்களது தொழில் வளர்ச்சி குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியுள்ளார். இதனையடுத்து புதுதில்லியில் வருகின்ற ஜன.26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து அஞ்சல்துறை மூலம் அழைப்பிதழை அனுப்பியுள்ளனர். புள்ளாகவுண்டம்பட்டி அஞ்சல் அலுவலகத்திலிருந்து அவர்களுக்கு அழைப்பிதழ்கள் வந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் கைத்திறனில் உருவாகியுள்ளதை அறிந்து அவர்களும், அவர்களது குடும்பத்தினரும், அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி, ராமக்கூடல் பகுதியிலிருந்து இரு தொழில் முனைவோர் குடியரசு தினவிழாவில் பங்கேற்க செல்வது ஊர் கிராம மக்களிடத்தில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.