போக்குவரத்து இடையூறு செய்யும் பிளெக்ஸ் பணியாளர்கள்

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு செய்யும் பிளெக்ஸ் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2026-01-14 16:26 GMT
குமாரபாளையத்தில் சவுண்டம்மன் திருவிழா நடந்து வருகிறது. இன்று சக்தி அழைப்பு, அதனை தொடர்ந்து சாமுண்டி அழைப்பு, ஜோதி அழைப்பு, அலங்கார திருவீதி உலா, வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்சிகள் தினம் ஒவ்வொன்றாக நடக்கவுள்ளன. இதற்காக நகரில் பல இடங்களில் பொதுமக்களை வரவேற்று பல்வேறு தரப்பினர் பிளெக்ஸ் பேனர் வைத்துள்ளனர். பேனர் அமைக்கும் பணியாளர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் கட்டுவது என்பது இல்லாமல், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் , போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில், பிளெக்ஸ் பிரேம்களை சாலையில் போட்டு, பிளெக்ஸ் ஐ அதில் ஒட்டி, எடுத்து மூங்கிலில் கட்டி வருகின்றனர். இதனால் எண்ணற்ற வாகனங்கள் போக வழியில்லாமல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்று பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பிளெக்ஸ் பணியாளர்கள், மற்றும் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேனர் கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள தெருவில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யாமல் பிளெக்ஸ் ஐ பிரேம்மில் ஒட்டி, பிளெக்ஸ் கட்ட வேண்டிய இடத்திற்கு தூக்கி வந்து, கட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது. நேற்று காலை நகராட்சி அலுவலகம் அருகே, சுமார் நூறு அடி நீளமுள்ள பிளெக்ஸ் ஐ சாலையில் போட்டு, ஒட்டிக்கொண்டு இருந்தனர். இதனால் தாசில்தார் அலுவலகம் வருபவர்கள், நகராட்சிக்கு அலுவலகம் வருபவர்கள், தலைமை அஞ்சல் நிலையம் வருபவர்கள், காவிரி ஆற்றுக்கு வருபவர்கள், பவானிக்கு செல்பவர்கள், பவானியில் இருந்து குமாரபாளையம் வருபவர்கள் என ஏராளமான பேர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பிளெக்ஸ் வைக்க அனுமதி பெறப்பட்டதா? எனவும், குறிப்பிட்ட அளவு நீளம், அகலம் தான் பிளெக்ஸ் வைக்க வேண்டும் எனவும் பிளெக்ஸ் வைப்போர் மீது, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் கடைபிடிக்க வேண்டும். இந்த நூறு அடி பிளெக்ஸ் வைக்கப்பட்ட இடத்தில்தான், சவுண்டம்மன் திருவிழாவில் சக்தி, அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி ஆகியன நடக்கவுள்ளன. இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து நிற்கும் இடம் இது. பேனர் மீது ஏறி நின்று கூட திருவிழா காணும் கூட்டமும் உண்டு. இதனால் பிளெக்ஸ் சாய்ந்தால், எண்ணற்ற நபர்கள் பாதிப்புக்கு ஆளாவர்கள் என்பது உண்மை. பொதுமக்கள் அதிகம் கூடி நிற்கும் இடங்களில் இது போன்ற, ஆபத்தை விளைவிக்கும் பெரிய அளவிலான பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும். நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் இதற்கு சாட்சி.

Similar News