கலவை அருகே பழங்குடியின மக்களுக்கு தவெக சார்பில் மாட்டுப் பொங்கல் திருவிழா முன்னிட்டு வேட்டி, சேலைளுடன் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேல்லி கிராம பழங்குடியின பகுதியில் மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் திமிரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மேல்நெல்லி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2026-01-16 10:40 GMT
கலவை அருகே பழங்குடியின மக்களுக்கு தவெக சார்பில் மாட்டுப் பொங்கல் திருவிழா முன்னிட்டு வேட்டி, சேலைளுடன் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேல்லி கிராம பழங்குடியின பகுதியில் மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் திமிரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மேல்நெல்லி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் கலந்துக் கொண்டு வேட்டி, சேலைகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் பேசிய விஜய் மோகன், மக்களுக்காக சேவை செய்யக்கூடிய ஒரே கட்சியாக தமிழக வெற்றி கழகம் உள்ளது அதற்கு சான்றாகத்தான் தற்பொழுது பழங்குடியின மக்களுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகிறோம். வருகின்ற 2026 தேர்தலில் தீய சக்தியான திமுகாவை வீழ்த்த வேண்டும் அதற்க்கு நீங்கள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்குகள் போட்டு தளபதி விஜய் முதல்வராக அமர வைக்க வேண்டும் என பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளரை வரவேற்கும் விதமாக மேளதாளம் முழங்க விவசாயிகளின் அடையாளமான மாட்டு வண்டியில் மூலம் அழைத்து வரப்பட்ட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சுரேஷ், ஒன்றிய இணை செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர்கள் தினேஷ், பாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்..

Similar News