புதிய தானியங்கி அதிநவீன பால்பதன ஆலையின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ்.

பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் ரூ.89.28 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தானியங்கி அதிநவீன பால்பதன ஆலையின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.;

Update: 2026-01-16 14:11 GMT
நாமக்கல் மாநகராட்சி, மோகனூர் சாலையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மேயர் து.கலாநிதி , பால்வளத்துறை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஆவின்) அ.ஜான்லூயிஸ், ஆகியோர் முன்னிலையில் ரூ.89.28 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தானியங்கி அதிநவீன பால்பதன ஆலையின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்து, அதன் நினைவாக பால் உற்பத்தியாளருடன் கூடிய கறவை மாடு சிலையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டு பால்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, மானியக்கோரிக்கை எண்-8ன் படி, நாமக்கல் மாவட்டத்தில் 2.0 இலட்சம் லிட்டர் கையாளும் திறன்கொண்ட நவீன தானியங்கி பால்பண்ணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 22.10.2024 அன்று மேற்படி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு புதிய அதிநவீன பால்பண்ணை பிப்ரவரி 2026-ல் திறக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஷ் குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு பணிகள் விரைந்து நடைபெறுவதை கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கடந்த 27.06.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் முன்னிலையில், ஆலையின் இயந்திரங்கள் நிறுவும் பணியினை தொடங்கி வைத்தார்கள். பால் பண்ணை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் இன்றைய தினம் (16.01.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையின் திறப்பு விழாவானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று எதிர்வரும் பிப்ரவரி 2026-ம் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை அமைக்கப்படும் போது, மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 5 இலட்சம் நுகர்வோர் பயன்பெறுவார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த 5 ஆண்டுகளின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் அளவிலும், சங்க அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் அளவில் 2500 பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த தொழிற்நுட்ப பயிற்சி, 3000 நபர்களுக்கு சுத்தமான பால் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வழங்கும் பாலுக்கு இருவேளையும் பால் வழங்கியவுடன் நிகழ்விட உடனடி ஒப்புகை சீட்டு வழங்கி தரமான பாலுக்கு கூடுதல் விலை கிடைப்பதை 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை கூடுதல் தொகை கிடைப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21.66 கோடி மதிப்பில் 2,884 நபர்களுக்கு KCC கால்நடை பராமரிப்பு கடன், 723 நபர்களுக்கு ரூ.8.24 கோடி மதிப்பில் வங்கி கடன் மூலம் குறைந்த வட்டியில் கறவை கடன், TABCEDCO பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 1172 நபர்களுக்கு ரூ.13.36 கோடி கறவை மாட்டு கடன், சிறிய பால் பண்ணை அமைப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 204 பால் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.6.12 கோடி கடன், பால் உற்பத்தியாளர்களின் 20,000 கறவை மாடுகளுக்கு மானிய அடிப்படையில் ரூ.49.75 கோடி காப்பீடு, அதற்கு மானியமாக பால்வளத்துறையின் மூலம் ரூ.38.25 கோடி, 200 பயனாளிகள் எருமை கிடாரி கன்று வளர்ப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தேவையான தீவனம், தாதுஉப்பு, குடற்புழு நீக்க மருந்து மற்றும் சிறப்பு பாலின செயற்கை முறை கருவூட்டல் மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் ஒன்றியத்தின் 2023-24ம் ஆண்டு இலாபத்தில் இருந்து 14,000 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.08 கோடி கூடுதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.3 ஊக்கத்தொகை அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு நாளது தேதி வரை ரூ.30.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயுமானவர் திட்டத்தின் கீழ் கொல்லிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்க சார்ந்த 100 பால் உற்பத்தியாளர்களின் சினையாக உள்ள கறவைகளுக்கு 50 சதவீத மானிய விலையில் கலப்பு தீவனம் வழங்கப்பட உள்ளது. பிரதம சங்க அளவில் 505 எசங்கங்கள் மற்றும் 40 கிளை நிலையங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு 545 பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் இணைந்துள்ள 505 எண்ணிகையிலான அனைத்து சங்கங்களிலும் பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடி ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பால் பெருக்கு திட்டத்தின் கீழ் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 10 சங்கங்களுக்கு 50 துருவுறா எஃகு கேன்கள், 10 உடனடி ஒப்புகை சீட்டு வழங்கும் பால் பரிசோதனை கருவிகள், சங்கங்களுக்கு தேவையான பதிவேடுகள், தளவாடச்சாமான்கள் மற்றும் சங்க ஊழியருக்கான நிர்வாக மானிய நிதி உதவி ஆகியவை ரூ.18.6 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பால் பெருக்கு திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு 100 சதவீத மானியத்தில் 50 கணிணிகள், தேசிய பால் பெருக்கு திட்டத்தின் கீழ் சங்கங்களுக்கு 111 எண்ணிக்கையிலான எடை கருவிகள், ஏற்கனவே சங்கங்கள் பதிவு செய்யபடாமல் உள்ள 10 கிராமங்களில் புதியதாக சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.12.50 இலட்சத்தில் பால் கொள்முதல் உபகரணங்கள், பரிசோதனை கருவிகள், பதிவேடுகள் மற்றும் நிர்வாக மானிய நிதி உதவி ஆகியவை 100 சதவீத ஒன்றிய பங்களிப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பால் வள வாரியத்தின் ஒன்றிய புத்தாக்க திட்டதின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் 10 சங்கங்கள் புதியதாக செயல்படுத்தப்பட உள்ளது.சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை நிலுவையின்றி பால்பணம் நாளது தேதி வரை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது. வளமிகு வட்டார வளர்ச்சி திட்டதின் கீழ் (FBDP) கொல்லிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கங்களுக்கு ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டில் 150 துருவுறா எஃகு கேன்கள் மற்றும் 500 லிட்டர் கொள்திறன் கொண்ட 3 பால் குளிர்விப்பான்கள் வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நிதி உதவி மூலம் 2 சங்கங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 49 சங்கங்களில் 4,265 உறுப்பினர்களுக்கு போனஸ் தொகையாக ரூ.51.48 இலட்சமும் 8 சங்கங்களில் 1,775 உறுப்பினர்களுக்குஇ ரூ.36.37 இலட்சம் ஆதரவு தள்ளுபடி தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஒன்றிய அளவில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிர்வாக பயன்பாட்டிற்காக ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நபார்டு திட்ட நிதி உதவி மூலம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2.0 இலட்சம் கொள்ளளவு கொண்ட பால் பதன ஆலை கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் நிதி உதவி, தேசிய பால் வள வாரியத்தின் கடன் உதவி மற்றும் ஒன்றிய நிதி ஆகியவற்றின் பங்களிப்பின் மூலம் ரூ.89.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் மற்றும் உபகரணங்கள் பொறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது. தேசிய பால் பெருக்கு திட்டத்தின் கீழ் நாமக்கல் ஒன்றியத்தில் புதியதாக 17 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு தற்போது பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பாண்டு ரூ.4.52 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் ஒன்றியத்தின் மூலம் நாளது தேதி வரை 10 நாட்களுக்கு ஒருமுறை சராசரியாக ரூ.5.00 கோடி பால்பண பட்டுவாடா தொகையாக சங்கங்களின் வங்கி கணக்கிற்கு நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.00 ஊக்கத்தொகை டிசம்பர் 2025 மாதம் வரை நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆவின் பால் நுகர்வோர்களுக்கு பலனளிக்கும் வகையில் பால் பாக்கெட் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.00 விலை குறைப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிதி உதவியின் மூலம் 14 கியாஷ்க் (KIOSK) பாலகங்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாற்றுதிறனாளிகள் நல வாரியத்தின் நிதிஉதவியின் மூலம் ரூ1,50,000/- மதிப்பிலான புதிய பாலக உரிமங்கள் 3 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் 11 பாலகங்கள் ஒன்றிய நிதியின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய பால்வள வாரியத்தின் நிதி உதவி மற்றும் ஒன்றிய நிதி பங்களிப்பின் மூலம் ரூ.88.70 இலட்சம் மதிப்பீட்டில் 5 பாலகங்கள் மற்றும் பால் விற்பனை உபகரணங்கள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் , நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ரூ.89.28 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பால் பதனிடும் ஆலையின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்து, அதன் நினைவாக நடைபெற்ற ‘ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026-ல் பால் உற்பத்தியாளருடன் கூடிய கறவை மாடு சிலையினை திறந்து வைத்தார். தொடர்ந்து, தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) திட்டத்தின் கீழ் ரூ.31.59 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பால் பொருட்கள் பண்டக சாலை மற்றும் ரூ.17.06 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பனிக்கூழ் அறை ஆகியவற்றினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MoFPI) திட்டத்தின் கீழ் ரூ.47.16 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வாகனத்தின் சேவையினை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலக உரிமம் மற்றும் பால் உபபொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் திரு.நவலடி, பொது மேலாளர் (ஆவின்) மரு.ஆர்.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News