பழனி பாதயாத்திரை துவங்கிய முருக பக்தர்கள்
குமாரபாளையத்தில் முருக பக்தர்கள் ஏராளமானோர் பழனி பாதயாத்திரை துவங்கினர்.;
குமாரபாளையம் நகரில் தைப்பொங்கல் திருவிழாவில் ஏராளமான பேர் பழனி பாத யாத்திரை செல்வது வழக்கம். நேற்று தைப்பொங்கல் திருநாள் கொண்டாடிய நிலையில், நேற்று பழனி பாதயாத்திரை துவங்கினர். குமாரபாளையம் சுற்றியுள்ள இடைப்பாடி, சங்ககிரி, வட்டமலை, பல்லக்காபாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முருக பக்தர்கள் குமாரபாளையம் வழியாக பழனிக்கு பாத யாத்திரை சென்றனர். சிறுவர், சிறுமியர் உள்பட இந்த யாத்திரையில் பங்கேற்றனர். சேலம் கோவை புறவழிச்சாலையில் ஆங்காங்கே பந்தல் அமைத்து, முருக் பக்தர்களுக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.