சவுண்டம்மன் திருவிழாவில் தேவாங்கர் குல குருவிற்கு உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் சவுண்டம்மன் திருவிழாவில் தேவாங்கர் குல குருவிற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.;

Update: 2026-01-17 14:57 GMT
குமாரபாளையம் சேலம் சாலை ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு முடிந்து நேற்று மகா ஜோதி திருவீதி உலா நடந்தது. தேவாங்க சமுதாய மக்களால் நடத்தப்படும் இந்த திருவிழாவில், தேவாங்கர் சமுதாய குல குரு, கர்நாடக, ஹம்பி, தயானந்தபுரி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இவருக்கு கோவில் விழாக்குழுவினர் மற்றும் தேவாங்க சமுதாயத்தினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்.இவரிடம் பக்தர்கள் ஏராளமானோர் ஆசி பெற்று, பிரசாதம் பெற்றனர்.

Similar News