சென்னத்தூர் லாடவரம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் எருதாட்ட திருவிழா. ஆரணி எம்எல்ஏ பங்கேற்பு.

ஆரணி அடுத்த சென்னத்தூர் லாடவரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் எருதாட்ட திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்;

Update: 2026-01-19 01:47 GMT
ஆரணி அடுத்த சென்னத்தூர் லாடவரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் எருதாட்ட திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.. ஆரணி அடுத்த சென்னத்தூர் லாடவரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை முன்னிட்டு எருதாட்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். உடன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகர செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் யுவராஜ், கணபதி, நரசிம்மன், என்.வாசு, வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் ஜி.போஸ், பூபாலன், பழனி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. பின்னர் எருதாட்ட திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Similar News