ஆவுடையார் கோயில்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி ஆவுடையார் கோயில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;

Update: 2026-01-19 08:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி ஆவுடையார் கோயில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் உலக புகழ்பெற்ற எட்டாம் நூற்றாண்டு சேர்ந்த மாணிக்கவாசரால் திருவாசகம் பாடப்பட்ட திருத்தலமான திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்து பெற்ற கோயில் ஆகும் மேலும் இங்கு வருடத்திற்கு மூன்று முறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலை சுற்றி வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் இறைச்சி கடைகள் வைத்தும், வர்த்தகம் செய்தும் வரும் வியாபாரிகள் வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர். ஆலயத்தைச் சுற்றி தேரோடும் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு பல வருடங்களாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை, இதனால் தேர் சுற்றி வரும் போது திருப்ப இடமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவ்வூர் பொதுமக்கள் மனு அளித்தனர்

Similar News